நெல்லையில் 12ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். இதில், சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனையும், முனீஸ்வரன் என்வருக்கு 13 ஆண்டுகளும், முருகேசன் என்பருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
