Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிங்கார சென்னை” அட்டை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம்..!!

போக்குவரத்துத் துறையின் அறிவிப்புகள்:

  • “சிங்கார சென்னை” அட்டை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம்
  • பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்
  • பேருந்துகள் இருப்பிடக் கண்காணிப்பு கருவி
  • வாகன விபத்து வழக்குகளுக்கு விரைவான தீர்வு

சிங்கார சென்னை தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயணிகளின் எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான கட்டணப் பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடைமுறையில் உள்ள சிங்கார சென்னை தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள் :

போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி நேரங்களுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் 140 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 19,000 மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த, பேருந்துகளின் இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (VITD) மற்றும் அவசர உதவி பொத்தான்கள் 13,490 பேருந்துகளில் பொருத்தப்படும்.

வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மட்டும் உள்ள 286 பேருந்துகளில் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தப்படும்.இத்திட்டம் ரூ.17.99 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலுவையிலுள்ள 5,665 மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளை (MCOP) விரைந்து தீர்வு செய்வதன் மூலம், விபத்து இழப்பீட்டுக் கோரிக்கைகள் விரைவாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, P பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உரிய காலத்தில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். நிலுவையிலுள்ள வழக்குகளைத் தீர்வு செய்வதற்காக, 5.500.67 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

error: Content is protected !!