திருச்சி மாவட்டம் பிராட்டியூர் அருகே உள்ள வாய்க்கால் கரையில் 8 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று உலா வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த முதலையை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பரிசோதித்த பிறகு, கல்லணை அருகே உள்ள காவிரி கரை பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவித்தனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
