Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு

5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு

திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவி விலகினர். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதனால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே, இந்த 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக் கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தரப்பில் தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை செப்டம்பர் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

error: Content is protected !!