300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெரு விழாவினை முன்னிட்டு அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயமான இங்கு ஆண்டுதோறும் அன்னையின் பிறப்பு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதே போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சிறப்பு

திருப்பலிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர் பவனி இன்று இரவு நடைபெற்றது. கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் தேரினை புனிதம் செய்து வைத்து தொடங்கி வைத்தார். வான வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த அலங்கார தேர் பவனியில் தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த



ஆயிரகணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க – மரியே வாழ்க என்று பக்தி கோசமிட்டு வழிபாடு நடத்தினர்.
