பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து 134 பயணிகளுடன் சென்ற ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற பயணிகள் படகில், கோரோன் கடல் பகுதி அருகே எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதில், இதுவரை 42 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், படகில் பயணித்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் கடலில் மாயமாகியுள்ளனர்.
