Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்

செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்

நாகப்பட்டினத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்திந்தித்து மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் திட்ட இயக்குனர் பாலமுருகனிடம் கடந்த 8ம் தேதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி ராஜேந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது 2026 2027 ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வேதாரண்யம் தாலுக்கா சிறுதலைக்காடு கிராமத்திற்கு நிதி ஒதுக்கீடு பரிந்துரை குறித்து கேட்டார்.

அப்போது திட்ட இயக்குனர் பொறுப்பற்ற முறையில் பதில் கூறினார். இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (10ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஷாஜகான், ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடப்பதால் ஆர்ப்பாட்டம் நடந்த போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர்களை சந்தித்து மனு கொடுக்க முன்னாள் எம்பி ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது ஏ எஸ்பி பிரியங்கா பார்கவ் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரும்பிலான தடுப்பு கட்டைகளை வைத்து தடுத்தனர். மேலும் கலெக்டர் அலுவலக முதன்மை நுழைவு வாயிலை அடைத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் விரக்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் பரபரப்பு நீடித்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அமைச்சரை சந்திக்க அனுமதி அளித்தனர்.

தவெக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை கூட அமைச்சர்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்த காரணத்தால் தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முன்னாள் எம்பி ராஜேந்திரன் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வந்த அமைச்சர்களை சந்தித்து மனு கொடுக்க மாலையுடன் காங்கிரஸ் கட்சியினர் வருகை தந்தோம். ஆனால் கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை கூட காவலர் விட அனுமதி மறுத்துள்ளனர். இது கண்டித்தக்கது என்றார்.

error: Content is protected !!