சென்னை: திருவொற்றியூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்து என காவல் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் கொலைகள் அதிகரித்து வருவது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
