Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து

ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து

கரூரில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள “மண்டாடி” திரைப்படத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட சூரி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

கரூரில் இரண்டு திரையரங்குகளில் திரைப்படம் வெளியான நிலையில், அஜந்தா திரையரங்கம் முன்பு திரண்ட ரசிகர்கள் இசையமைத்து, சிலம்பாட்டம் சுற்றியும், பட்டாசுகள் வெடித்தும் திரைப்பட வெளியீட்டை கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்திற்கு கரூர் மாவட்ட நிர்வாகிகளான சூர்யா யூனுஸ் தலைமையில்,

மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய தலைமை நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் நடனமாடியும், உற்சாக கோஷங்களை எழுப்பியும் நடிகர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் அஜந்தா திரையரங்கம் முன்பு ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திருவிழா போல் காட்சியளித்தது.

error: Content is protected !!