ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கரட்டூரில் சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில், கீழே விழுந்த நடராஜ் என்ற பைக் ஓட்டுநர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
