அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்க குடிமகனுக்கும் 5,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.75 லட்சம்) வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டெக்சாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் இந்த தொகை வழங்கப்படும் என்றார். மேலும், இந்தப் பணத்தை அமெரிக்காவிற்குள்ளேயே செலவிட நிபந்தனை விதித்துள்ளார்.
