காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் இதுவரை காசா முனையில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.74 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
