கேரளாவின் திருவனந்தபுரத்தில், நேற்று ஒன்றரை வயது குழந்தையை அவரது தாய் கிறிஸ்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். விலவூர்க்கல் பகுதியில் நடந்த இச்சம்பவம் மாலை 5 மணியளவில் வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தை உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் கிறிஸ்டியை விசாரணைக்காக கொண்டு சென்றனர். குடும்பத் தகராறு அல்லது மனநலப் பாதிப்பு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றத்திற்கான நோக்கம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
