20-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்.19-ம் தேதி முதல் அடுத்த மாதம் அக்.4-ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 36 விளையாட்டு பிரிவுகளில் களம் காணவுள்ள 503 பேர் கொண்ட இந்திய அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 269 வீரர்கள் மற்றும் 234 வீராங்கனைகள் அடங்கிய இந்த அணியில், அதிகபட்சமாக தடகளப் பிரிவில் மட்டும் 74 வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து 22 வீரர்கள் மற்றும் 14 வீராங்கனைகள் என மொத்தம் 36 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய விளையாட்டு: இந்திய அணியில் 36 தமிழக வீரர்-வீராங்கனைகள்
