Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டுக்குள் சடலமாக கிடந்த வியாபாரி… திருச்சி க்ரைம்

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

கடலூர் மூதாட்டி திடீர் மாயம் .. கணவன் போலீசில் புகார்

கடலூர் மாவட்டம் வலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி ( 65 )இவர் தனது மனைவியை கடந்த 14 ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் தலையில் பலத்த காயத்துடன் அனுமதித்தார். அங்கு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திடீரென்று மாயமாகி விட்டார். அவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவி
ல்லை இது தொடர்பாக மூதாட்டியின் கணவர் ராமசாமி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார் புகார் என் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு

திருச்சி சந்து கடை சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் இவரது மகன் பாலாஜி (வயது 36) இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மஞ்சகாமாலை நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் காலில் அடிபட்டு அதற்கும் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் கடந்த 8ந்தேதி மீண்டும் காலில் அடிபட்ட காரணத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி வடக்கு தாராநல்லூர் மாணிக்கம் பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்தவர்
மாதையன் (வயது 72) இவர் கடந்த 12 ந் தேதி வீட்டில் இருந்தபோது மாடி படிக்கட்டில் ஏறும்பொழுது திடீரென்று வழுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் கடந்த 12ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பெற்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாதையன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வீட்டிற்குள் சடலமாக கிடந்த வியாபாரி …போலீசார் விசாரணை

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் இவரது மகன் அரவிந்த்
(32 ). இவர் வீட்டு உபயோக பொருட்களின் மொத்த வியாபாரி ஆவார். திருமணம் ஆகாத காரணத்தால் அரவிந்த் மதுக்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில் கடந்த 16ந் தேதி வீட்டில் சாப்பிட்டுவிட்டு கதவை பூட்டிக்கொண்டு தனது அறைக்கு சென்றார். இதையடுத்து நேற்று அவரது தந்தை ஆனந்த் அறையின் கதவு தட்டிய போது நீண்ட நேரம் யாகியும் திறக்கவில்லை பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்தபோது அரவிந்தன் வலது காலில் ரத்தம் வழிந்த நிலையிலும், வலது நெற்றியில் சிறிய காயத்துடன் மயங்கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் அரவிந்தன் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து அரவிந்தன் தந்தை ஆனந்த் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த் இறந்ததற்கான காரணம் என்ன? எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி கன்டோன்மெண்ட் ராக்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பு செல்வனுக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கண்ட்ரோல்மென்ட் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 58) ஜனத் (வயது 33) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.பிறகு இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!