திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் பார்த்தசாரதி (17). இவர் திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இவரும், இவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் திருச்சி ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தடுப்பணையில் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட சக மாணவர்கள் காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரை மீட்டனர். பார்த்தசாரதியை காப்பாற்ற முடியவில்லை.
தகவலறிந்த திருச்சி கோட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் ரப்பர் படகு உதவியுடன் காணாமல் போன பார்த்தசாரதியை தேடி வந்தனர். இந்நிலையில் இறந்தவரின் உடல் ஓடத்துறை அருகே மீட்டனர்.
