தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகை வடிவுக்கரசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று வரை படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், தற்போது நடிகர் பிரபுவின் திரைப்பட படப்பிடிப்பிற்காக காரைக்குடி செல்ல தயாராகி வருவதாகவும் கூறிய அவர், தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்கு நன்றி என்றும், இத்தனை மனிதர்களை தான் சம்பாதித்து வைத்திருப்பதை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
