விஜய் சேதுபதியுடன் பணியாற்றுவது கடவுளின் ஆசீர்வாதம் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சாய் அபயங்கர் பேசுகையில், ‘கருப்பு’, ‘ரதிமா’ படங்களுக்குப் பிறகு ‘பத்தா’ மூலம் மீண்டும் உங்களை சந்திப்பது மிகப்பெரிய வாய்ப்பு. விஜய் சேதுபதி அண்ணாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது கடவுளின் ஆசீர்வாதம் போல இருக்கிறது என்றார்.
