கிழக்கு-மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
