நடிகை ராதா அளித்த ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தொடர்பாக, நடிகை அம்பிகா சென்னையில் இன்று (செப்.23) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். ஏ.ஆர்.எஸ். கார்டனை எம்ஜிஆர் வழங்கியதாக கூறப்படுவது தவறானது என்றும், தங்களது உழைப்பில் வாங்கிய சொத்து என்றும் தெரிவித்தார். மேலும், சொத்து தகராறை தீர்க்க ராதாதான் காசோலை வழங்கியதாகவும், பின்னர் அதனை நிறுத்தியதும் அவர்தான் என்றும் அம்பிகா கூறினார். ராதா கூறுவது பொய் என மறுத்த அம்பிகா, காசோலை தொடர்பான புகாரையும் மறுத்தார்.
