Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழகு நிலையத்தில் பாலியல் தொழில்- 4 பெண்கள் மீட்பு

அழகு நிலையத்தில் பாலியல் தொழில்- 4 பெண்கள் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பல்வேறு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் சாரங்கபாணி தெற்கு வீதியில் செயல்பட்டு வந்த குறிப்பிட்ட அழகு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தெரியவந்தை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, அழகு நிலையத்தில் இருந்த 4 பெண்களை காவல்துறையினர் மீட்டனர். பின்னர் 4 பெண்களும் திருச்சியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கும்பகோணம் பேருந்து நிலையம், ராமசாமி கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த அழகு நிலையம் யார் நடத்தி வருகிறார்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!