ஜோலார்பேட்டை அருகே உலக மருந்தக தினத்தை முன்னிட்டு சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பின் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
உலகம் முழுவதும் உலக மருந்தக தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இயங்கி வரும் தனியார் மருந்தக கல்லூரியில் பயிலும் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பின் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக

மண்டலபாடி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த பேரணையின் போது பொறுப்பான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து குறித்தும் தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவது நுண்ணுயிர் எதிர்ப்பை அதிகரிப்பது குறித்தும் நுண்ணுயிர் எதிர்ப்பு பாகடிரியாக்கள் குறித்தும் நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
