புதுக்கோட்டை மாவட்டம் நிஜாம் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில், ஷட்டர் இடைவெளி வழியாக சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்துள்ளது. காலையில் பணியாளர்கள் கடையைத் திறந்தபோது பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் அடைத்து வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
புதுகையில் ரேசன் கடைக்குள் புகுந்த 7அடி நீள பாம்பு மீட்பு
