திருச்சியில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்
5 பேர் மீது வழக்கு திருச்சி செப்டம்பர் 24 திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கிரே பிரவீன் உத்தரவின் அடிப்படையில் புறநகர் பகுதிகளில் தீவிர குட்கா புகையிலை வேட்டை நடத்தப்பட்டது.
மணச்சநல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன் மற்றும் போலீசார் மணச்சநல்லூர் எஸ் பி.கே. காம்ப்ளக்ஸ் எதிர்புறம் மொபட்டில் கடத்தப்பட்ட 86 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக மணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்( வயது 57) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
துவாக்குடி அண்ணா ஆர்ச் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல்புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது இது தொடர்பாக புதுக்கோட்டை குளத்தூர் கீரனூர் பகுதியைச் சேர்ந்த போசாங்கு (30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிகண்டம் சூரங்குடி பட்டியில் இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக நாகமங்கலம் சூரங்குடி பட்டி ராயப்பன் 65 என்பவர் மீது மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.துவரங்குறிச்சியில் பெட்டிக்கடையில்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57 கிலோ எடை கொண்ட கணேஷ் ஹான்ஸ் கூலிப் போன்ற புகையிலைப் பொருட்களை துவரங்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் பறிமுதல் செய்தார் இது தொடர்பாக மருங்காபுரி அதிகாரம் வடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (52) அஜித்குமார் (27) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
