நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் நாளை (செப்.25) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. காதல் மற்றும் அதனால் ஏற்படும் குழப்பங்களை மையமாகக் கொண்ட இப்படத்தில் பிரபு, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், வி.டி.வி.கணேஷ், சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
