கள்ளக்குறிச்சியில் 7 மாத கர்ப்பிணியான சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக, சிறுமியின் தந்தை ராமர், தாய் சரோஜா மற்றும் தாலி கட்டி குடும்பம் நடத்திய மாணிக்கம் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் ஊர்நல அலுவலர் வேதநாயகி அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
