ஹுருன்இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026-ன் படி, இந்திய அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரது ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களின் பங்களிப்புடன் அவரது சொத்து மதிப்பு ரூ.10,000 கோடியாக உள்ளது. இவரை தொடர்ந்து அமிதாப் பச்சன் ரூ.4,000 கோடி, சல்மான் கான் ரூ.3,000 கோடி மற்றும் ஹிருத்திக் ரோஷன் ரூ.2,500 கோடி சொத்து மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
