Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டம் சென்னை மாநகராட்சி தகவல்

ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டம் சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 எண்ணிக்கையிலான பேருந்து தட சாலைகளும், 5,65.89 கி.மீ. நீளமுடைய 35,978 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ், 2026-27ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 360 கி.மீ நீளமுடைய பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரையில் உள்ள சேதமடைந்த 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 160 கி.மீ நீளத்திலான 780 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளை ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!