தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும். மேலும் கோடைகால சாகுபடியும் மேற்கொள்ளப்படும். இங்கு விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் 1250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு திருநெல்வேலிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
