கன்னியாகுமரியில் யூடியூப் பிரபலம் மதுமிதாவின் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவர் சமூக வலைதளங்களில் தனது சொகுசு வாழ்க்கை குறித்தும், பணம், நகைகள் குறித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மதுமிதா, தான் சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ள தனக்குத் தெரியாதா என திருடர்களுக்கு சவால் விடும் பழைய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அதில், தான் தனது நகைகளை பேங்க் லாக்கரில் வைத்துள்ளதாக கூறியிருந்தார்.
ரூ.1 கோடி நகைகள் கொள்ளை.. திருடர்களுக்கு மதுமிதா சவால்
