அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் 2-ம் பாகத்திற்கான நடிகர் தேர்வு நடைபெறுவதாக பரவும் போஸ்டர்கள் முற்றிலும் போலியானவை என தயாரிப்பு நிறுவனமான AGS மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு குழுவினர், ‘டிராகன் 2’ பற்றிய போலியான அறிவிப்புகளை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், படம் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலமே வெளியிடப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
டிராகன்’ படத்தின் 2-ம் பாகமா?: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
