Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே சாக்கடையில் உயிரிழந்து கிடந்த வாலிபர்-பரபரப்பு

தஞ்சாவூர் மேலவீதி சக்கநாயக்கயன் தெருவில் அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே சாக்கடையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடைப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத

பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்து கிடந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (33) என்பது தெரிய வந்தது. மதுபோதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!