தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று (செப்.30) விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் செல்கிறார்.
தாராபுரம் மாருதி நகர் பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விஜய் பயணிக்கும் கோவை முதல் தாராபுரம் வரையிலான வழித்தடங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
