அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கூட்டத்தில் கலந்துகொண்ட கூகுள் CEO சுந்தர் பிச்சையை அறிமுகப்படுத்தி பேசிய அதிபர் டிரம்ப், “இவர் ஓர் அரக்கன், யாருக்கும் அது தெரியாது” என அவரது திறமையை பாராட்டி நகைச்சுவையாக குறிப்பிட்டார். டிரம்பின் இந்த புகழ்ச்சியைக் கேட்ட சுந்தர் பிச்சை, தலைகுனிந்து சிரித்தபடியே இந்திய பாரம்பரிய முறைப்படி கையெடுத்துக் கும்பிட்டுத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
கூகுள் CEO சுந்தர் பிச்சையை அரக்கன் என பாராட்டிய டிரம்ப்
