Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் மாதாந்திர அடிப்படையில் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.66.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் ஒன்றின் தற்போதைய விற்பனை விலை ரூ.2,984 ஆக உயர்ந்துள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.66.50 அதிகரித்து ரூ.2,983க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், தேநீர்க் கடைகள் மற்றும் உணவுக் கூடங்கள் (கேண்டீன்கள்) உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயுக்கான மாதாந்திர செலவினம் கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள வணிக சிலிண்டர் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மேலும் ஒரு கூடுதல் சுமையாக உருவெடுத்துள்ளது.

அதேவேளையில், பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் வீடுகளி்ல் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் பழைய விலையிலேயே தொடர்கிறது.

error: Content is protected !!