Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

அக்டோபர் 6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவை தடுக்க மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை.

மதுராந்தகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், பணப் பட்டுவாடா மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இத்தொகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக 9 பறக்கும் படை குழுக்களுடன், நிலை கண்காணிப்பு மற்றும் காணொளி கண்காணிப்புக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் தலைவர்களின் பரப்புரை வேகம் எடுத்துள்ளதால், பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பறக்கும் படையினர் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் உரிய ஆவணமற்ற பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தடுத்து நிறுத்தத் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!