எடமமேற்கு வங்காளம் கொல்கத்தாவை சேர்ந்த திலீப் ஷா ( 38) என்பவர் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆயில் தொழிற்சாலையில் பீல்ட் மேனேஜராக தான் பணியாற்றி வருவதாகவும், இதில் தினேஷ் பஸ்வான் என்பவர் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறாராம். இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி 28.566மெட்ரிக் டன் சோப்பு தயாரிக்கும் மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை மணலியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை சரக்கு லாரி மூலம் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.இந்நிலையில் இவர் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்று கொண்டிருந்தபோது அவரை செல்போனில் அழைத்தபோது தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும், உடல்நிலை தேறியவுடன் பணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு போன் பேசிய போது அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து அலுவலக குழுவினர் வாகனத்தின் ஜிபிஎஸ் இருப்பிடத்தை சரி பார்த்தபோது திருச்சியில் உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே விராலிமலை மதுரை நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் நிறுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது டேங்கர் லாரியில் இருந்த 28.566 மெட்ரிக் டன் சோப்பு தயாரிக்கும் மூலப் பொருட்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது மேலும் டிரைவர் தினேஷ் பவனையும் காணவில்லை எனவே எங்களுடைய பொருட்களை கண்டுபிடித்து தருமாறு மனுவில் திலீப் ஷா கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரிப் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் தினேஷ் பஸ்வான் மற்றும் ரூபாய் 86,000 மதிப்புள்ள சோப்பு தயாரிக்கும் மூலப் பொருட்களை திருடி சென்ற மர்ம ஆசாமி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
