மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக படாளம் பகுதியில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வருகிறார். அப்போது, தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் கிரீடத்தை விஜயின் தலையில் அணிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பரிசாக வழங்கினார். இந்தப் புகைப்படத்தை விஜயிடம் வழங்கிய தொண்டர், அவரது அரசியல் பயணத்தை வாழ்த்தும் விதமாக இந்தப் பரிசை அளித்ததாக கூறப்படுகிறது. ரோடு ஷோவின்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்தப் புகைப்படம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
விஜய்க்கு கிரீடம் அணிவித்த MGR.. தொண்டர் அளித்த பரிசு
