அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 3.60 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டில் 296 நாட்கள் அரசு பேருந்துகளைவிட குறைவான கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறோம். மீதமுள்ள நாட்களில் சங்கங்கள் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்துக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.டிக்கெட் புக்
குறிப்பிட்ட 50 சர்வீஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக சங்கத்துக்கும், அரசுக்கும் புகார்கள் வந்தன. இதையடுத்து பயணிகள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் திரும்பப் பெறப்பட்டு, அரசுடன் இணைந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டது. ஆம்னி பேருந்து தொழில் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், தொலைதூரப் பயணங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்றன.
விழாக்காலங்களில் மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி அபராதம் விதிப்பதைவிட, இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்காக ஆம்னி பேருந்துகளுக்கு புதிய பர்மிட் வழங்குவதுடன், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம் பயணிகளுக்கும், ஆம்னி பேருந்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயன் ஏற்படும். எனவே, தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலையிட்டு, ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண நிர்ணயம் மற்றும் புதிய பர்மிட் தொடர்பாக நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
