Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேப்டனை நேரில் பார்க்காதவர்கள் அவரது ஆன்மா குறித்து பேச அருகதை இல்லை

கேப்டனை நேரில் பார்க்காதவர்கள் அவரது ஆன்மா குறித்து பேச அருகதை இல்லை

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். கேப்டனை நேரில் பார்க்காதவர்கள் அவரது ஆன்மா குறித்து பேசக்கூடாது. அதற்கான அருகதை யாருக்கும் இல்லை. தம்பி ஆதவ் அர்ஜூனா இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, மூலனூர் நால்ரோடு பகுதியில் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: துரோகத்தின் விளைவாகவே இடைத்தேர்தல் வந்துள்ளது. சுயநலத்திற்காக வேறு கட்சிக்குச் செல்பவர்களுக்கு, வரும், 6ம் தேதி வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் சவுக்கடி கொடுக்க வேண்டும் வரும் 9-ம் தேதி தேர்தல் முடிவின்போது, துரோகத்திற்கு மக்கள் என்றும் இடமளிக்க மாட்டார்கள் என்பது பதிவாக வேண்டும். முதல்வர் பங்கேற்ற மேடையில், அமைச்சர் ராஜ்மோகன் வந்து காதில் பேசியதும், ‘ஸ்டார்ட்… கேமரா… ஆக் ஷன்’ என சினிமா போல நாடகத்தை நடத்திவிட்டனர். தமிழகம் தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடன் சுமையைக் குறைக்க வேண்டியவர்கள், கடனை மேலும் அதிகரித்து வருகின்றனர். எம்.எல்.ஏ., கார் வேண்டாம் என எழுதிக்கொடுத்து, அந்தப் பணத்தில் நெல் கொள்முதல் கிடங்கு அமைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘கேப்டனின் ஆத்மா’ என்று பேசி வருகிறார். அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விஜயகாந்தைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

error: Content is protected !!