Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளருக்கு பி.கே.சேகர்பாபு வாக்கு சேகரிப்பு

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளருக்கு பி.கே.சேகர்பாபு வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று முதல் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று நல்லூர், விராலூர், சின்ன வெண்மணி ஊராட்சிகளில் கிராம பெண்களின் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, திமுக வேட்பாளர் பரந்தாமன் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், உங்கள் வீட்டுப் பிள்ளைகள் கேட்டால் சாக்லெட், துணிமணி, பொம்மைகளை வாங்கி கொடுங்கள். அவர்கள் சொல்வதற்காக, நீங்கள் வாக்களிக்காதீர்கள். அனைவருக்கும் சிந்தித்து வாக்களிக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் உங்களுக்காக பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். தற்போது மாற்றம் வேண்டும் என நினைத்து வாக்களித்த உங்களுக்கு ஏமாற்றம் மட்டும்தான் கிடைத்துள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் இ.பரந்தாமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறவைத்தால், அவர் சட்டமன்றத்தில் உங்களின் பிரச்னைகளை எடுத்து கூறி, உடனடி தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை 2வது நாளாக மதுராந்தகம் தொகுதியின் பல்வேறு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கிராம பெண்களிடம், திமுக வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறவைக்கும்படி முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உரையாற்றினார். அவருக்கு கிராம பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன், மேயர் பிரியா உள்பட மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!