Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைவு?

சென்னை குழந்தைகள் நலமருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைவு?

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைவு? – சேதமடைந்த இருக்கைகள், குடிநீர் தட்டுப்பாடு; அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினமும் ஏராளமான குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் வந்து செல்கின்றனர். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்கள் அமருவதற்காக வைக்கப்பட்டுள்ள பல இருக்கைகள் ஆங்காங்கே சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் போதிய இருக்கை வசதி இல்லாததால் குழந்தைகளும், பெற்றோர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளிலும் பற்றாக்குறை இருப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் சிகிச்சைக்காக வரும் முக்கியமான மருத்துவமனையில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய வேண்டிய உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படாதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அவர்களுக்கு தேவையான ஓய்வு மற்றும் அமர்வு வசதிகள் போதுமான அளவில் இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமா? அல்லது சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியமா? என்ற கேள்வியையும் நோயாளிகளின் உறவினர்கள் எழுப்புகின்றனர்.

பிரசித்தி பெற்ற குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக அகற்றி புதிய இருக்கைகள் அமைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனை வளாகத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!