Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.6 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை? பெண் புகார்

ரூ.6 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை? பெண் புகார்

செங்கல்பட்டு மாவட்டம், நரசன் குப்பம் திருக்கழுக்குன்றம் மெயின் ரோடு உலகத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் மேகலா (27). இவருக்கு கரிகால சோழன் என்பவருடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 4 வயதில் ரித்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கரிகால சோழன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அப்போது மேகலா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கொளத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் இலவசமாக பிரசவம் பார்ப்பதாக விளம்பரத்தை பார்த்து கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

மேகலா 7வது மாதம் கர்ப்பமாக இருக்கும்போது அந்த மருத்துவமனைக்கு வந்து பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது மேகலா குறித்த முழு தகவல்களையும் மருத்துவரிடம் கூறியுள்ளார். உடனே பெண் மருத்துவர் உனக்கு கணவன் இல்லை, நீ இப்படி இரண்டு குழந்தைகளை வளர்ப்பாய் என கேட்டுள்ளார். மேலும் பணம் வேண்டும் என்றால் வாங்கிக் கொள், குழந்தையை கொடுக்க முடியுமா என கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மேகலா நான் எப்படியாவது குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.பின்பு கடந்த 2025 ஜூலை 29ம் தேதி மேகலாவிற்கு அதே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மேகலா குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறியபோது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, குழந்தை தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பின்பு 10 நாட்கள் கழித்து குழந்தையை காண்பித்துள்ளனர்.

அப்போது மற்றொரு பெண் மருத்துவர் ஒருவர், திருவெற்றியூரைச் சேர்ந்த வனிதா ராஜேந்திரன் என்பவர் திருமணமாகி குழந்தை இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வருகிறார்.  அவரிடம் மூன்று மாதம் குழந்தை இருக்கட்டும் அதன் பின்பு நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். மேகலா அதற்கு ஒத்துக்கொண்டு மூன்று மாதம் கழித்து நேற்று முன்தினம் வனிதாவிடம் சென்று குழந்தையை கேட்டபோது அவர் நான் 6 லட்ச ரூபாய் கொடுத்து குழந்தையை மருத்துவமனையில் இருந்து வாங்கி வந்தேன். உங்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் மருத்துவமனைக்கு சென்று கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேகலா இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பெண் மருத்துவர்கள் பணத்திற்காக குழந்தையை வாங்கி விற்பனை செய்தார்களா அல்லது இதில் வேறு ஏதாவது வியாபார நோக்கம் உள்ளதா, மேகலா கூறுவது உண்மையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!