Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேண்டுமென்றே புறக்கணித்த அமைச்சர் ரமேஷ்… மேடையில் பதிலடி கொடுத்த எம்எல்ஏ நவல்பட்டு விஜி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால், முசிறி விக்னேஷ், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்ஈ திருவரும்பூர் நவல்பட்டு விஜி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கேற்றினார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரும் மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் அதனை தொடர்ந்து அமைச்சர் ரமேஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்கை குத்துவிளக்கு ஏற்ற அழைத்தார். அந்த சமயத்தில் நான் ஏற்ற வேண்டாமா ? என திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி மெழுகுவர்த்தியை வாங்க முயன்றார் அப்போது வாங்க மறுத்து மெழுகுவர்த்தியை எம்எல்ஏ விஜி தட்டிவிட்டார்.

அப்போது எம்எல்ஏ விஜி ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள் புரோட்டாக்கால் தெரியாதா? என கோபத்துடன் அமைச்சர் ரமேஷை பார்த்து கேட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏறு்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அதிகாரிகள் சமாதானம் செய்த பின்பு திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி விளக்கேற்றினார். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் விளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது கூட்டணி கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மீது பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் ரமேஷ் எம்எல்ஏ நவல்பட்டு விஜியை ஒதுக்குவது போல் அரசு விழாக்களில் அவரை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியிலும் கூட அவரை ஒதுக்குவது போல் நடந்து கொண்டதால் நவல்பட்டு விஜி கோபப்பட்டதாக திருவெறும்பூர் தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!