Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீரின்றி கருகும் இளம் பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

தண்ணீரின்றி கருகும் இளம் பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

நடவு செய்து 30 நாட்களே ஆன இளம் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. விளைநிலங்கள் அனைத்தும் பாழம் பாழமாக வெடித்து காணப்படுவதால் விவசாயிகள் வேதனை.

தஞ்சாவூர் மாவட்டம் வைரபெருமாள் பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. கல்லணை கால்வாய் அருகில் உள்ள இந்த பகுதியில் தண்ணீர் இன்றி விளைநிலங்கள் காய்ந்து வருகிறது. நாற்று நடவு செய்யப்பட்டு 30 நாட்கள் ஆன நிலையில் தண்ணீர் இன்றி பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. விளைநிலங்களா தரிசு நிலங்களா என்பது போல் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே குறுவை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டதால்

அதனை நம்பி சம்பா சாகுபடியில் ஈடுபட்டும்
ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காதால் பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. மழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் ஏக்கருக்கு 30,000 செலவு செய்த அனைத்தும் வீணாகிவிடும் என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link