Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காமாட்சிபுரத்தில் திடீர் சாலை மறியல்

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காமாட்சிபுரத்தில் திடீர் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே காமாட்சிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கமான உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காமாட்சிபுரம் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர் மீது மாட்டுச் சாணம் வீசப்பட்ட சம்பவம். நூற்றுக்கும் மேற்பட்டோர் அணைக்கரை பந்தநல்லூர் சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

பாட்டாளி மக்கள் கட்சியில் அங்கமாக இருக்கும் உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவராக இருந்து வரும் கோ.ஆலயமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே காமாட்சிபுரம் கடைவீதியில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் போஸ்டர் மீது மாட்டுச் சாணத்தை வீசி சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காமாட்சிபுரம் கடை வீதியில் பந்தநல்லூர் அணைக்கரை சாலையை முற்றுகையிட்டு டாக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமாட்சிபுரம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அமைக்கப்படும் விளம்பர பேனர்களை கிழிப்பதும், தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் கும்பல் செயல்பட்டு வருகிறது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த சாலை மறியல் போராட்டத்தில் இருக்கும் அதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் இருந்து சம்பவம் இடத்திற்கு வந்த பந்தநல்லூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது
இந்த சாலை மறியல் போராட்டத்தால் காமாட்சிபுரத்தில் பரபரப்பான சூழலும் அணைக்கரை பந்தநல்லூர் சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!
Secret Link