Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் வாகனங்களை அடித்து நொறுக்கி வாலிபர் ரகளை.. அதிர்ச்சி

கோவையில் வாகனங்களை அடித்து நொறுக்கி வாலிபர் ரகளை.. அதிர்ச்சி

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சென்ற வாகனங்களைக் கையில் இரும்புக் கம்பியுடன் மர்ம நபர் ஒருவர் தாக்கி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சி செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான குனியமுத்தூர் பிரதான சாலை பகுதியில் இன்று (அக்டோபர் 5) அதிகாலை வேளையில், கையில் நீளமான இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் உலா வந்து உள்ளார்.

​அப்போது அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை வழிமறித்து, கையில் வைத்து இருந்த இரும்புக் கம்பியால் சற்றும் எதிர்பாராத விதமாக ஓங்கி அடித்துத் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.

அதிகாலை நேரத்தில் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அல்லது போதை ஆசாமியைப் போல் நடந்து கொண்ட அந்த நபரின் இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கித் தப்பிச் சென்றனர்.

​சில வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பவத்தைக் தூரத்தில் இருந்து தங்களது செல்போன்களில் படம்பிடித்தனர். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பேசுபொருளாகி உள்ளது.

error: Content is protected !!