Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீ சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை நடத்த அனுமதி -கலெக்டரிடம் மனு

பாரம்பரிய வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்! ஸ்ரீ சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில் தங்களது பாரம்பரிய வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் பக்தர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், கோயில் கட்டுமானப் பணிகள் சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று, தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாகவும், கோயில் பணிகளுக்காக பக்தர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் பல லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் ஆனால், நிதி வசூல் மற்றும் செலவுகள் தொடர்பான வரவு–செலவு கணக்குகள் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோயில் நிர்வாகம் தொடர்பாக விளக்கம் கேட்ட குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் கைங்கரிய நண்பர்களுக்கு கடந்த ஓராண்டாக கோயிலுக்குள் சென்று வழிபாடு மற்றும் கைங்கரியம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும்

கடந்த மாதம் கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பிரச்சினையால் பதற்றமான சூழல் உருவானதாகவும், காவல்துறையினர் தலையிட்டு பின்னர் கோயில் நுழைவாயில் திறக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோன்ற பிரச்சினை கடந்த ஆண்டும் ஏற்பட்டதாகவும், பலமுறை புகார் அளித்தும் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பூஜைக்கு அனுமதிக்க
வரும் 10ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில் அமைதியான முறையில் சிறப்பு பூஜை மற்றும் கைங்கரியம் மேற்கொள்ள உரிய அனுமதி வழங்குவதுடன், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கோயில் கட்டுமானப் பணிகள், நிதி வசூல், வரவு–செலவு கணக்குகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்..

error: Content is protected !!