IPL தொடரில் விளையாடும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் Ex.கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஹேமங் பதானிக்கு பதிலாக சவுரவ் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த அணியின் ஆலோசகராகவும் இயக்குநராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்ட கங்குலி, தற்போது நேரடியாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்
