Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செக் மோசடி வழக்கு: நடிகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை

செக் மோசடி வழக்கு: நடிகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை

புதுடில்லி: செக் மோசடி வழக்கில் நிலுவைத் தொகையை செலுத்த தவறிய பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு சிறைதான் சரியான இடம் என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், கடந்த 2010ம் ஆண்டு திரைப்படம் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்திடம் ரூ.5 கோடி நிதியுதவி பெற்றிருந்தார். இந்த கடனை அடைப்பதற்காக 2013ம் ஆண்டு தலா ரூ.1.05 கோடி மதிப்பிலான 7 காசோலைகளை அவர் வழங்கினார். ஆனால் அவை அனைத்தும் வங்கிக் கணக்கில் போதிய பணமின்றி ‘பவுன்ஸ்’ ஆகி சர்ச்சையை ஏற்படுத்தின.

வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.11 கோடி பாக்கி வைத்துள்ள இந்த நீண்டகால வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய அவகாசம் அளித்து ரூ.2 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தரப்பில் ரூ.50 லட்சத்திற்கான வரைவோலை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, ‘இந்த திமிரை சரியான இடத்தில் அடக்க வேண்டும். எப்போது வாய் திறக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் இடம் சிறைதான்’ என்று காட்டமாக எச்சரித்தார். தொடர்ந்து, எஞ்சிய பணத்தை உடனடியாக செவ்வாய்க்கிழமைக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒரு வாரம் ஒத்தி வைத்தனர்.

error: Content is protected !!